
எந்த ஜாதகமாக இருந்தாலும் லக்ன பாவத்திற்கு காரகம் வகிப்பவர் சூரியன். அது மட்டுமல்ல அதிகாரிகள், நிர்வாகிகள், ஊழியர்கள் இவர்களுக்கு அதிதேவதையும் சூரியனே. மேலும் ஜாதகரின் அப்பாவைப் பற்றி தெரிந்து கொள்ளவும் சூரியனே சூத்திரதாரி. அதனால்தான் பிதுர்காரகன் என்று அழைக்கப்படுகிறார்.
ஜீவன் என்று அழைக்கப்படும் உயிருக்கும். எலும்புக்கும், வலது கண்களுக்கும் பொறுப்பு வகிக்கக் கூடியவர். தலைக்கும் காரகம், தலைமுடிக்கும் காரம் வகிப்பவர். அறிவாற்றல், செல்வாக்கு, கௌரவம், வீரம், விவேகம், என்று நீளமான பட்டியலே சூரியனுக்கு உண்டு.
ஒரு ஆணின் ஜாதகத்தில் சூரியன் வலுப்பெற்று நின்றால் இங்கே சொல்லிய அனைத்து நிலைகளிலும் ஜாகதர் சிறப்புற்று திகழ்வார். அதுவே ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியன் வலுப்பெற்று நின்றால் நன்நடத்தை, கற்பு நெறியில் சிறந்து விளங்குவார் என்பது சாஸ்த்திர சம்மதம். ஆனால் சூரியன் நீச்சம் பெற்று விட்டாலும், சனியோடு சேர்க்கைப் பெற்றிருந்தாலும், ராகுகேது தொடர்பில் இருந்தாலும் சூரிய தோஷம் என்பார்கள்.
அந்த வகையில் சூரியன் தந்தைக்கு காரண கிரகமாக வருவதால் தந்தைவழி உறவுகளில் பிரச்சனையை ஏற்படுத்துவார். தந்தையோடு இணக்கமான உறவை வைத்துக் கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்துவார். பூர்வீக சொத்தில் பிரச்சனைகள் தோன்றும்.
ஒருவரின் அரசு வெகுமதி, அரசாங்க உதவி மற்றும் பதவிக்கு காரணமான கிரகம் சூரியன். அந்தவகையில் சூரியன் பலவீனமடைந்தால் அரசாங்க நன்மைகள் பெற முடியாது. சில வில்லங்க விவகாரங்கள் வர காரணமாக அமைந்து விடும். அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்யம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம். அங்கு பலன்கள் பாதிக்கப்படும்.
தலை வழுக்கையாதல், ஒற்றைத்தலைவலி, கண்ணாடி அணிய வேண்டிய நிலை, வயிறு சம்பந்தப்பட்ட குறைபாடுகள், பித்தம் அதிகரித்தல், இதயநோய் போன்றவை ஏற்படவும் காரணமாக மாறிவிடுவார். சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசுவழி அனுமதிகள் கிடைப்பதில் தாமதம், சிலருக்குத் திருமண தாமதம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சூரியன் அமைப்பு சரியில்லையாதலால், அதாவது சூரியதோஷத்தால் வரும்.
சூரியதோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?
ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், தினமும் கேளுங்கள். மேஷம், விருச்சிகம், தனுசு, மீணம், சிம்ம ராசியில் பிறந்தவர்கள் என்றால் ரத்தன கற்களில் மாணிக்கத்தை மோதிரமாகவோ, டாலராவோ செய்து அணிவித்துக் கொள்ளுங்கள்.
தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.
நிறம் : சிகப்பு
ஜாதி : சத்திரியன்
வடிவம் : சம உயரம்
மனித அவயம் : தலை
உலோகம : தாமிரம்
ரத்தினம் : மாணிக்கம்
வஸ்திரம் : சிகப்பு
சமித்துக்கள் : எருக்கு
தூபதீபம் : சந்தணம்
மலர் : செந்தாமரை
தாணியம் : கோதுமை
திசை : கிழக்கு
அதிதேவதை : சிவன்
ஆட்சிவீடு : சிம்மம்
உச்சவீடு : மேஷம்
நீச்சவீடு : துலாம்
பெயர்ச்சிகாலம் : ஒரு மாதம்
நட்சத்திரங்கள் : கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
உபகிரகம் : காலன்
வேறுபெயர்கள் : ஞாயிறு, ரவி, பானு, ஆதவன், கதிரவன், அருக்கன், அலரி
சூரிய மந்திரம்
ஜபா குஸீம சங்காசம்
காச்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம்
பரணதோஸ்மி திவாகரம்