Header Banner Advertisement

கர்ப்ப காலத்தில் பெண்கள் வயிற்றில் குழந்தை உதைக்கும் சுவாரஸ்ய தகவல்கள்


Women baby kicks stomach

print

கர்ப்ப காலத்தில் பெண்கள் பல இனிமையான அனுபவங்களைப் பெறுவார்கள். அதில் ஒன்று தான் வயிற்றில் வளரும் குழந்தையின் அசைவு அல்லது உதை. பொதுவாக முதல் முறையாக கர்ப்பமான பெண்களுக்கு, வயிற்றில் வளரும் குழந்தை எப்போது உதைக்கும் என்று தெரியாது.
அப்படி புதிதாக திருமணமாகி கருத்தரித்த பெண்களின் மனதில் குழந்தை எப்போது உதைக்கும் என்பது போன்ற சில கேள்விகளுக்கான பதில்கள் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது குழந்தையின் உதை குறித்த சில சுவாரஸ்ய தகவல்களைக் காண்போம்.

தகவல் #1
இரண்டாவதாக கருத்தரித்த பெண்களுக்கு, 13 ஆவது வாரத்திலேயே குழந்தையின் அசைவு தெரிந்துவிடும்.

தகவல் #2
பொதுவாக முதல் முறையாக கருத்தரித்தால், குழந்தையின் செல்ல உதையை 18-24 வாரத்திற்குள் உணரக்கூடும்.

தகவல் #3
முக்கியமாக கர்ப்பிணிகள் உட்கொள்ளும் உணவுகளைப் பொறுத்தும் குழந்தையின் அசைவு உள்ளது. நல்ல ஆரோக்கியமான டயட்டை ஆரம்பத்தில் இருந்தே மேற்கொள்ளும் பெண்களின் வயிற்றில் உள்ள குழந்தை நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சீக்கிரமே குழந்தையின் அசைவு தெரியும்.

தகவல் #4
குழந்தையின் அசைவை உணவு உட்கொண்ட பின் அல்லது ஏதேனும் ஜூஸைப் பருகிய பின் உணர முடியும். மேலும் ஒருசில செயல்களில் ஈடுபடும் போதும், இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் போதும் குழந்தையின் அசைவை உணரலாம்.

தகவல் #5
36 ஆவது வாரத்திற்கு பின், குழந்தையின் அசைவு சற்று குறைவாக இருக்கும்.

தகவல் #6
குழந்தையின் அசைவு தெரிய ஆரம்பித்துவிட்டால், சரியாக தூங்க முடியாது. எனவே எந்த நிலையில் தூங்குவது சிறந்தது என்பதை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.