Header Banner Advertisement

உறவுமுறையில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள்


Words not be used relationship

print

உறவுமுறையில் விரிசல் ஏற்படுவதற்கு சண்டையின் போது தம்பதியினர் பயன்படுத்தும் ஒரு சில மோசமான வார்த்தைகளே காரணம் ஆகும்.

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது. இது வள்ளுவரின் வாக்கு.

நாவினால் சுட்ட சொல்லுக்கு, நீங்கள் எந்த வகையில் மன்னிப்பு கேட்டாலும் அது பாதிக்கப்பட்டவர்களின் மனதில் இருந்து ஆறவே ஆறாது.

இந்த உலகில் மன்னிக்க முடியாதது என்ற ஒரு குற்றம் கிடையாது. ஆனால் அதனை மன்னிப்பதற்கு நம் மனது பக்குவப்படவேண்டும். அப்படி நம் மனது பக்குவப்படவில்லையெனில் உறவு முறைகளில் விரிசல் ஏற்படுவது நிச்சயம்.
குடும்ப வாழ்க்கையில் என்னதான் பிரச்சனைகள் வந்தாலும் உங்கள் துணையின் மனதை காயப்படுத்தும் வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தா வண்ணம் உங்கள் நாக்கை அடக்கிகொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.

உன்னை விட நான் திறமையானவர் –

என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். அது தம்பதியினர் இடையே ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும்.

பக்கத்து வீட்டில் இருப்பவரை பார் –

ஊதியம் மற்றும் குணநலன்கள் சார்ந்த விடயத்தில், பக்கத்து வீட்டில் இருப்பவரோடு ஒருபோதும் ஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள்.

நீ போலியானவன் –

சண்டையின் போது என்னிடம் நீ நடிக்கிறாயா? என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், மனதுக்குள் நம்மை போலியானவன் என்று நினைத்துக்கொண்டுதான் இவ்வளவு நான் நம்முடன் வாழ்ந்துள்ளார் என்று நினைக்கத்தோன்றும்.

நீ ஒரு Waste, எதற்குமே தகுதியில்லாவன் –

சண்டைபோட்டுக்கொண்டிருக்கும்போது கோபத்தின் உச்சகட்டத்தில் இருக்கும்போது நீ ஒரு Waste என்று ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டால் போதும், அந்த இடமே ஒரு போர்க்களமாக மாறிவிடும். இந்த உலகில் வாழ தகுதியில்லாவன் என்ற வார்த்தை மனதில் பாய்மரத்து ஆணி போன்று பதிந்துவிடும். காலம் உள்ளவரை அந்த வார்த்தை மனதில் ஒருவித வலியினை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கும்.

முந்தைய காதலை சம்பந்தப்படுத்தி பேசுவது –

திருமணம் ஆன புதிதில் தம்பதியினர் தங்களுடைய முந்தைய காதல் பற்றி பேசி சந்தோஷமாக சிரித்துக்கொள்வார்கள். ஆரம்பத்தில் இதுபோன்ற விடயம் தம்பதியினர்களுக்கு பெரிய விடயமாக இருக்காது. ஆனால், காலப்போக்கில் சண்டை ஏற்படும்போது முந்தைய உறவினை சொல்லிக்காட்டும்போது, சந்தேகத்துடன் தான் இவ்வளவு காலம் என்னுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாயா என்ற கேள்வி அங்கு எழுந்து உறவில் விரிசல் ஏற்படும்.