Header Banner Advertisement

உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் !


X range properties palm

print

உலகில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான கைரேகை இருப்பதில்லை. ஆனால், கை ரேகையில் ஒரு சில விஷயங்கள் பொதுவாக ஒரு சிலருக்கு மத்தியில் மட்டும் அமையலாம்.
இதே போல, இரண்டு உள்ளங்கை ரேகையிலும் X போன்ற குறி இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களுடைய சிறப்பு குணாதிசயங்கள் என்னென்ன என்று இனி காண்போம்…

கிரேட் அலெக்சாண்டர்!

பண்டைய காலத்தில் ராஜ ஜோதிடர்களே இதை பற்றி கூறியிருப்பதாகவும். கிரேட் அலெக்சாண்டர் மிகப்பெரிய அரசராக விளங்குவார் என்று அவரது இரண்டு கைகளில் இருந்த X குறியை வைத்து கூறி இருந்தார்களாம்.

ரஷ்ய பல்கலைக்கழகம்!

இதுப்பற்றி ரஷ்ய எஸ்.டி.ஐ பல்கலைகழகம் கைரேகையில் X குறி இருப்பவர்கள் பற்றி ஒரு ஆய்வும் நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் உலகில் இரண்டு கோடி மக்களுக்கு இந்த X விதி பொருந்தும் என ஆய்வறிக்கை அவர்கள் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

தனிதன்மை!

இரண்டு உள்ளங்கை ரேகைகளிலும் இந்த X குறி உள்ளவர்கள் தனித்தன்மை வாய்ந்து இருப்பதாக அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ஆபிரகாம் லிங்கனுக்கும் பொருந்துகிறது என கூறுகிறார்கள்.

வலுமையான குணம்!

கைரேகையில் இந்த X குறி உள்ளவர்கள் வலிமை பொருந்திய குணம் கொண்டிருப்பதாககும். அவர்கள் விதி சிறந்ததாகவே அமைந்திருப்பதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.

தந்திரம்!

எந்நாளும் வெற்றி என்ற பாதையில் பயணிக்கும் இவர்கள் வெற்றிக்கு இதுதான் தந்திரம் என்று எதையும் பின்பற்றுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இவர்கள் மனம் சொல்வதை கேட்டு பயணிப்பவர்களாக இருப்பார்கள்.

பொய், துரோகம்!

X குறி ரேகை உள்ளவர்களிடம் பொய் கூறி தப்பிப்பதும், துரோகம் செய்வதும் மிகவும் கடினம். மேலும், அவர்களது விதி மிகவும் வலுவாக இருக்கும். மன ரீதியாக மட்டுமின்றி, உடல் ரீதியாகவும் இவர்கள் வலிமையாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

தீர்க்கதரிசன குணங்கள்!

இந்த X குறி கொண்டுள்ளவர்கள் மத்தியில் காணப்படும் தீர்க்கதரிசன குணங்கள்,
பயன் மிகுந்தவர்கள்!

அனைத்திலும் தெளிவான பார்வை கொண்டவர்கள்!
பெரிய தலைவர்கள்!

இறந்த பிறகும் மக்களால் மறக்க முடியாத நிலை பெறுபவர்கள்!