
இக்காலத்தில் நல்ல பண்புள்ளவரை சந்திப்பதே கஷ்டம். அதிலும் நல்ல பண்புள்ள காதலன்/காதலியை பார்ப்பது என்பது பெரிய அதிசயம். ஒருவேளை அப்படி சந்தித்தால் அவர்களை உங்கள் வாழ்க்கையில் எப்போதும் இழந்துவிட வேண்டாம்.
சரி, நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? நீங்கள் காதலிக்கும் ஆண் நல்ல பண்புள்ளவரா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் இங்கு நீங்கள் காதலிக்கும் ஆண் பண்புள்ளவர் என்பதை வெளிப்படுத்தும் சில குணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்…
மரியாதையுடன் நடத்துவார்
நல்ல பண்புள்ள ஆண்மகன் தன் துணைக்கும் தனிப்பட்ட விருப்பம் இருக்கும் என்பதை புரிந்து அவர்களை அடிக்கடி நச்சரிக்காமல், போதிய இடைவெளி விட்டு, துணையை மரியாதையுடன் நடத்துவார்கள். மேலும் மற்றவர் முன்னிலையில் உங்களை அவமரியாதையுடன் நடத்தமாட்டார்கள்.
கெட்ட வார்த்தை பயன்படுத்தமாட்டார்கள்
பண்புள்ள ஆண்மகன் எப்போதும் தன் காதலி/மனைவியிடம் கெட்ட வார்த்தையை அவர்கள் இருக்கும் போதோ அல்லது அவர்களிடமோ உபயோகிக்கமாட்டான்.
கையில் தாங்குவார்கள்
உங்கள் காதலன் ஜென்டின் மேன் என்றால், அவர்கள் உங்களை கையில் வைத்து தாங்குவார்கள். நீங்கள் கஷ்டப்படுவதை ஒரு போதும் பார்க்க விரும்பமாட்டார்கள். உதாரணமாக, சிறு பொருளை நீங்கள் தூக்குவதாக இருந்தாலும், உங்களை செய்யவிடாமல் அதனை அவர்களே செய்வார்கள்.
பொது இடத்தில் கேவலமாக நடக்கமாட்டார்கள்
நல்ல பண்புள்ள ஆண் பொது இடத்தில் தன் காதலியை தொடக்கூட விரும்பமாட்டான். மேலும் தன் காதலியை எப்போதும் வற்புறுத்தி அவர்களுடன் சந்தோஷமாக இருக்கவும் விரும்பமாட்டான்.
ராணி போன்று நடத்துவான்
முக்கியமாக நல்ல பண்புள்ள ஆண் தன் காதலியை ராணி போன்று பார்த்துக் கொள்வான். உங்கள் காதலன் உங்களுக்கு அவ்வப்போது பரிசுகள் மற்றும் ஆச்சரியங்களை வழங்கினால், உண்மையிலேயே அவர்களை மிஸ் பண்ண வேண்டாம். ஏனெனில் அவர்களை விட யாராலும் உங்களை நன்கு சந்தோஷமாக பார்த்துக் கொள்ள முடியாது.
தவிக்க விடமாட்டார்கள்
நல்ல பண்புள்ள ஆண் தன்னை நம்பி வந்த எந்த ஒரு பெண்ணையும் தவிக்கவிட மாட்டான். மேலும் தன் காதலிக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவான்.
பாதுகாப்பாக விளங்குவார்கள்
நல்ல பண்புள்ள ஆண் தன் துணை எப்போதும் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அதனால் தன் துணை எங்கு சென்றாலும், அவர்களை பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சேர்த்து விட்டு தான் அவர்களே வீட்டிற்கு செல்வார்கள்.